ராமர் கோயில் திறப்பிற்கோ, மத நம்பிக்கைக்கோ தி.மு.க. எதிர்ப்பு இல்லை: அமைச்சர் உதயநிதி
சேலத்தில் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் ஓட்டத்தை.. சென்னை, அண்ணா சாலையிலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு 310 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சேலத்திற்கு இந்த சுடர் கொண்டு செல்லப்படுகிறது.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, ராமர் கோயில் திறப்பிற்கோ மத நம்பிக்கைக்கோ தி.மு.க. எதிர்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
Comments