பார்வேட்டை உற்சவத்தில் வடகலை, தென்கலை கைகலப்பு..! முகம் சுளிக்கும் பக்தர்கள்

0 972

காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் கிராமத்தில், காஞ்சி வரதராஜப் பெருமாள் பார்வேட்டை உற்சவத்தில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே பிரபந்தம் பாடுவது யார் என்று அடிதடி மோதல் எற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

பெருமாளுக்கு பிரபந்தம் பாடுவது யார் என்று வடகலை, தென்கலை இரு பிரிவாக.. குழுச் சண்டை போட்டுக் கொண்ட காட்சிகள் தான் இவை..!

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி, பார்வேட்டை உற்சவம் கண்டருள்வது வழக்கம்.

அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத் வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

பழைய சீவரம் மலைமீது எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள், நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மாலை வெயில் வரதராஜ பெருமாள் மீது படும்படி மலையில் இருந்து ஒய்யாரமாக இறக்கப்பட்டார்.

மலையிலிருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்ல இரண்டு பெருமாள்களும் பக்தர்களுக்கு சேவை சாதித்து காட்சி அளித்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை பழையசீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தின் போது பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திடீரென கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வடகலை தென்கலை பிரிவினரிடையே பிரபந்தம் பாடுவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments