உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது : எச்.ராஜா
ராமஜென்ம பூமி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக பேசுபவர்களை சட்டத்தை மதிக்காத கும்பலாகத் தான் கருத முடியும் என பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, இண்டியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை எனவும், 56 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தேசிய சக்தி வெற்றி பெறும் எனவும் கருத்து தெரிவித்தார்.
Comments