ஆதார் அட்டையை பிறந்த தேதி சான்றாக ஏற்றுக் கொள்ள முடியாது - தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பான EPFO அறிவிப்பு

0 1022

ஆதார் அட்டையை இனி பிறப்புக்கான சான்றாக ஏற்க முடியாது என்று தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பான EPFO அறிவித்துள்ளது.

ஆதார் விவரங்களை ஆவணமாக சமர்ப்பிக்க முடியாது என்றும் இபிஎப்ஓ குறிப்பிட்டுள்ளது. UIDAI எனப்படும் தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகிக்கிறது.

இந்த அமைப்பு அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆதார் அட்டையை பிறந்த தேதிக்கு சான்றாக ஏற்க முடியாது என்றும் அதனை ஆவணங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments