ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை..?: உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு விளையாட்டரங்கில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போட்டிகள் நாளை துவங்க உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வீரர்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
மத்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் உதயநிதி கூறினார்.
Comments