சுற்றிச் சுழன்று சதிராடிய காளைகள்..! சுறுசுறுவென நடந்து முடிந்த சூரியூர் ஜல்லிக்கட்டு

0 611

650-க்கும் அதிகமான காளைகள் களம் கண்ட திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் 15 காளைகளை தழுவிய எம்.பி.ஏ. மாணவர் முதலிடம் பிடித்தார்.

அணைக்க முயன்றவர்களை தெறிக்க விட்ட காளைகள்..! சீறிய காளைகளைத் தழுவ துணிச்சலுடன் முயன்ற மாடுபிடி வீரர்கள்..! காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது, திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு.

திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 658 காளைகள் சூரியரில் களம்கண்டன.

வாடி வாசல் திறந்ததும் துள்ளிக் குதித்து வந்த காளைகளை அடக்க சுமார் 400 மாடு பிடி வீரர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் களம் கண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை கொம்பன் வீரர்களின் கட்டுக்கு அடங்காமல் வெற்றி பெற்றது.

இறுதியில் 15 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கே.டி.எம் கார்த்திக் என்பவர் முதல் பரிசாக இரு சக்கர வாகனத்தை பெற்றார்.

சிறந்த காளையாக தேர்வான திருச்சி இளந்தப்பட்டியை சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு 1200 சதுர அடி நிலம் பரிசாக வழங்கப்பட்டது.

பார்வையாளர்கள், பாதுகாப்பு பணியிலிருந்த இரண்டு காவலர்கள் உட்பட மொத்தம் 73 பேர் ஜல்லிக்கட்டின் போது காயமடைந்தனர். அமைச்சர் அன்பில் மகேஸ், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments