சென்னை காணும் பொங்கல் முன்னிட்டு இரவு 10 மணி வரையில் மட்டுமே கடற்கரையில் அனுமதி.. 3,168 இடங்களில் கண்காணிப்பு கேமரா

0 679

காணும் பொங்கலன்று சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் எலியட்ஸ் பகுதியில் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

கடற்கரைக்கு இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், மாநகரம் முழுவதும் 17 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

சாலைகளில் வீலிங்க், ரேஸிங் செய்வோரை கண்டறிவதற்காக 3 ஆயிரத்து 168 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கூடுதல் போக்குவரத்து  ஆணையரான சுதாகர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments