ரூ.371 கோடி மோசடி செய்ததாக சந்திரபாபு நாயுடு வழக்கில் இரு மாறுபட்ட தீர்ப்புகளால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்..
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்டு தீர்ப்பு வழங்கியதால், வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.
திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் 371 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு செய்திருந்தார்.
அதன் மீது தீர்ப்பளித்த நீதிபதி அனிருத்தா போஸ், ஊழல் தடுப்பு சட்டப்படி சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க முன் அனுமதி பெறப்படவில்லை என கூறினார்.
ஆனால், நேர்மையற்ற அரசு ஊழியர்களை விசாரிக்க முன் அனுமதி பெறாததை குறையாக கருத முடியாது என்றும் அதனால் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய இயலாது என்றும் நீதிபதி பெலா திரிவேதி தெரிவித்தார்.
2 நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.
Comments