அயோவா மாகாணத்தில், தேர்தலில் 50-சதவீதத்துக்கும் அதிக வாக்குகளை பெற்ற டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அயோவா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
அவருக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அயோவாவில் வெற்றிபெற்றதன் மூலம், அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பு டொனால்டு டிரம்புக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் வேட்பாளர் தேர்தலில் இருந்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி விலகியுள்ளார்.
டொனால்டை அதிபராக்க பாடுபடப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
Comments