விமானம் தாமதமானால் பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து கட்டணத்தைத் திருப்பித் தர உத்தரவு

0 1141

பனிமூட்டம் போன்ற இயற்கையான காரணங்களால் மூன்று மணி நேரத்துக்கு மேல் தாமதமாகும்போது, விமான சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

6மணி நேரம் தாமதம் ஆனால் பயணிகளுக்கு 24 மணி நேரம் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் பயணிகள் விரும்பினால்...

கட்டணத்தை திருப்பித் தரவோ மாற்று விமானம் ஏற்பாடு செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து நிறுவன இணையதள பக்கங்களிலும் விமானங்களின் அப்போதைய நிலவரம் குறித்து உடனுக்குடன் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments