சார்ஜே தேவையில்லை, 50 ஆண்டுகளுக்கு உழைக்கும் பேட்டரி... சுற்றுச்சூழலுக்கோ, உயிருக்கோ அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடிவமைப்பு
சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமின்றி 50 ஆண்டுகள் வரை உழைக்கும், "அணு" ஆற்றலால் இயங்கும் பேட்டரியை சீனாவைச் சேர்ந்த பீட்டா வோல்ட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
63 ஐசோடோப்புகளைக் கொண்ட இந்த அணு பேட்டரி, சிறிய நாணயம் அளவுக்கு மட்டுமே இருக்கும் என பீட்டா வோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு 3 வோல்ட் 100 மைக்ரோவாட் மின்சாரத்தை மட்டுமே வழங்கும் வகையில் இந்த பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் 2025க்குள் ஒரு வாட் மின்சாரத்தை வழங்கும் அளவுக்கு மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆற்றலைக் கொண்டு இயங்கினாலும் எளிதில் தீப்பிடிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Comments