சபஹர் துறைமுக வர்த்தக மேம்பாடு குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

0 683

இந்தியா- ஈரான் கூட்டுத் திட்டமான சபஹர் துறைமுகம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த உதவியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெஹ்ரானில் ஈரான் அமைச்சரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபஹர் துறைமுகத்தில் இந்தியா மேற்கொள்ளும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இத்துறைமுகம் வாயிலாக இந்தியா ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ஆசிய-ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுடன் வர்த்தகத் தொடர்புகளை வளர்க்க முடியும் என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments