தமிழர் திருநாளாம் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா..
கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு துணைவேந்தர் கீதாலட்சுமியை பணியாளர்கள் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர்.
தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த பெருமுளை கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கும்மி ஆட்டம், மேள தாளத்துடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் படூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சுமார் 75 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை பெண்கள் அசால்டாக தூக்கி வீசி ஆச்சர்யப்படுத்தினர்.
Comments