ஆன்லைன் விளையாட்டை விளம்பரப்படுத்தும் வீடியோவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை - டெண்டுல்கர் கவலை

0 791

ஆன்லைன் விளையாட்டை தான் விளம்பரப்படுத்துவது போன்று வெளியான வீடியோ போலியானது என்று தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆன்லைன் விளையாட்டு மூலம் தனது மகள் சாரா லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக தாம் விளம்பரப்படுத்துவது போன்ற வீடியோவுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து மக்கள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பதுடன், உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments