ஆம்பூர் குமாரமங்கலத்தில் 15 ரூபாய் கடனுக்காக ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொலை

0 924

ஆம்பூர் அருகே குமாரமங்கலத்தில், 15 ரூபாய் கடனுக்காக ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்ச்செல்வம் என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்சை அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் வாங்கிவிட்டு 15 ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.

இவர் தனது மகனோடு நேற்று காய்கறி வாங்கச் சென்றபோது அங்கு வந்த கடைகாரர் தமிழ்செல்வம் மற்றும் அவரது மகன் ஞானசேகரனுடன் வாய்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறி, கொலையில் முடிந்துள்ளது.

கொலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளின் காலில் விழுந்து சுரேஷ்குமாரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதனர்.

கொலை செய்தவரைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உதயேந்திரம் - பேர்ணாம்பட்டு சாலையில் 2மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பதற்றம் காரணமாக அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments