மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் குழுவினர் சந்திப்பு

0 803

தமிழக எம்.பி.க்கள் குழுவினர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து மிக்ஜம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தொகை ஒதுக்கக் கோரினர்.

பின்னர் பேட்டியளித்த தி.மு.க. நாடாளுமன்றக் குழு உறுப்பினர் டி.ஆர். பாலு, மத்திய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருப்பதாக தெரிவித்தார்.

மத்திய குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் பேரிடர் பாதிப்புக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து, வரும் 27-ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அமித் ஷா உறுதி அளித்திருப்பதாகவும் டி.ஆர்.பாலு கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments