இந்தியா வழியாக ரஷ்ய எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தகம்
உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்குப் பின்னர் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்த நிலையில், இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதியும் ஐரோப்பாவில் அதிகரித்துள்ளது. ரஷ்யாவுடன் நடுநிலை வகித்து உறவை காப்பாற்றி வரும் இந்தியா, அதேபோல் மேற்கத்திய நாடுகளுடனும் நல்லுறவை நீடித்து வருகிறது.
இதன் காரணமாக இந்தியா வழியாக ரஷ்யாவின் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஐரோப்பிய நாடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவில் 115 சதவீதத்துக்கும் மேல் விநியோகிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
Comments