சென்னை கடற்பகுதிக்கு அருகே 7 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய விமானப்படை விமானம் பாகங்கள் கண்டுபிடிப்பு

0 931

7 ஆண்டுகளுக்கு முன்பு விமானப்படையினர் 11 பேர் உட்பட 29 பேருடன் மாயமான இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் சென்னை அருகே கண்டுபிடிக்கப் பட்டன.

2016-இல் தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்ட விமானப்படையின் ஏ.என்-32 விமானம் சென்னைக்கு 280 கிலோ மீட்டர் கிழக்கே பறந்த போது தொலை தொடர்பை இழந்து மாயமானது.

விமானத்தை தேடும் முயற்சியில் பலன் கிடைக்காததால், அதில் பயணித்தோர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆளில்லா ஆழ்கடல் கலம் மூலம் 3,400 மீட்டர் ஆழத்தில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆய்வின் போது சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments