10 நாட்களுக்கு முன்பு நடந்த சித்ரவதை சம்பவத்தின் வீடியோவை காதலி வெளியிட்டதால் ரவுடி கைது

0 2052

எண்ணூர் வெங்கடேஷ் என்ற ரவுடியை அண்ணா என்று அழைக்காமல் ப்ரோ என அழைத்த நபரை வீடு தேடிச்சென்று அரிவாளால் தாக்கி, முட்டியிட்டு மன்னிப்புக்கேட்கவைத்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

எண்ணூர் வெங்கடேஷ் என்ற ரவுடி, ரிஷி கண்ணன் என்பவரிடம் 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கொடுத்து, விற்றுத் தருமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.

கஞ்சாவை விற்ற ரிஷி கண்ணன் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே திருப்பிக் கொடுத்ததாகவும், மீதி பணத்தை கேட்ட வெங்கடேஷிடம், "ப்ரோ.. உன் பொருள் குவாலிட்டியே இல்ல.. கிஸ்ஸா ஏறலை.. போதும் ப்ரோ.." எனக் கூறியதாக தெரிகிறது.

உடனே வெங்கடேஷ், 5 பேர் கும்பலை அனுப்பி ரிஷி கண்ணனை கத்தியால் வெட்டி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறப்படுகிறது.

10 நாட்களுக்கு முன் இச்சம்பவம் அரங்கேறிய நிலையில், ரவுடி வெங்கடேஷின் மைத்துனர் வருண் காதலித்து வந்த பெண்ணின் உறவினர்கள், உனது காதலன் உடல் மெலிந்து பீடி போலவும் காசநோய் வந்தவன் போலவும் இருக்கிறார் எனக் கூறி கிண்டல் செய்ததாக சொல்லப்படுகிறது.

அடியாளாக உள்ள தனது காதலனின் பெருமையை காட்டும் வகையில் வருணின் காதலி வெளியிட்ட வீடியோவால் வெங்கடேஷை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments