தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் கொண்டாட்டம்

0 868

ராமநாதபுரம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாணவிகள் ஆடல் பாடலுடன் பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தியாகராயநகர் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமான மாணவிகள் பங்கேற்று, பாட்டு, நடனம், சிலம்பம் என திறமைகளை வெளிப்படுத்தினர்.

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், தென்னை ஓலை குடில், ஒயிலாட்டம், உறியடித்தல் என, பொங்கல் விழா களைகட்டியது.

தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் அரசு கல்லூரி மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி மாணவர்கள் கரும்புகளை கையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்று கல்லூரி வளாகத்தில் பொங்கலிட்டு கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments