அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை புறக்கணிக்கும் காங்கிரஸ் கட்சியை நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள் பா.ஜ.க விமர்சனம்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை புறக்கணிக்கும் காங்கிரஸ் கட்சியை நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, கும்பாபிஷேகத்தில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி பங்கேற்க மறுத்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
இது காங்கிரசுக்கு புதிதல்ல என்று கூறிய அவர், நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா, ஜி20 உச்சி மாநாடு, கார்கில் விஜய் திவஸ் நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே புறக்கணித்தது என்றார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கும் விழாவிலும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் சுதன்ஷு திரிவேதி தெரிவித்தார்.
Comments