கரூரில் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் பங்களாவை மதிப்பீடு செய்யும் வருமானவரித்துறை அதிகாரிகள்

0 990

கரூரில் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் பங்களாவில் வருமானவரித்துறை சொத்து மதிப்பீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நேற்று செந்தில்பாலாஜியின் நண்பருக்குச் சொந்தமான கொங்கு மெஸ் உணவகம் மற்றும் அதன் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு சொந்தமான கட்டடங்களை மதிப்பீடு செய்த அதிகாரிகள், இன்று கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அசோக்குமார் குடும்பத்தினர் கட்டிவரும் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டனர்.

கட்டுமானப்  பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருக்கும் அந்த பங்களாவை மதிப்பீடு செய்யும் பணியில் 9 அதிகாரிகள் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments