மாதா சிலைக்கு மாலை போட்டது குத்தமா..? அண்ணாமலை மீது FIR..! வழக்கின் பின்னணி என்ன ?

0 2068

என் மண், எண் மக்கள் யாத்திரையின் போது, தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பி.பள்ளிபட்டி லூர்து மலை அன்னை மேரி தேவாலயத்திற்கு மாலை போடச் சென்ற பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை தடுத்து 3 இளைஞர்கள் வம்பிழுத்த நிலையில், அதில் ஒரு இளைஞர் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், எண் மக்கள் யாத்திரையின் போது, 8ந் தேதி பொம்மிடி அடுத்த பி.பள்ளிபட்டி லூர்து மலை அன்னை மேரி தேவாலயத்திற்கு சென்றார்.

அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் மணிப்பூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, அண்ணாமலையை தடுத்து மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்

அவர்களிடம் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக விரிவாக விளக்கிக் கூறினார் அண்ணாமலை

உடன் வந்தவர்கள் மீறிச்செல்ல முயன்ற போதும், போலீசார் அந்த இளைஞர்களை விரட்ட முயன்ற போதும் , அதனை வேண்டாம் என்ற அண்ணாமலை அந்த இளைஞர்களிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.

அவர்களில் ஒரு இளைஞர் மட்டும் சொல்பேச்சு கேளாமல் அண்ணாமலையுடன் வாக்குவாதம் செய்தார்.

ஆனால் எதிர்ப்பை மீறி அண்ணாமலை தேவாலயத்துக்குள் சென்று மேரி மாதாவுக்கு மாலை அணிவித்து வணங்கி வந்தார்

அப்போது இரு தரப்பும் முழக்கங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது,பொது அமைதியை குலைக்க தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

வழிமறித்து வம்பு செய்த திமுகவினரை விட்டு விட்டு, மாதாவுக்கு மாலை அணிவித்து திரும்பிய அண்ணாமலை மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டதாக தருமபுரி எஸ்.பி ஸ்டீபன் ஜேசு பாதத்திற்கு எதிராக பா.ஜ.கவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments