நயனுக்கு மனசுல சூர்யவம்சம் சின்ராசுன்னு நெனப்பு போல.. அதான் இப்படி பேசிருக்காங்க..! 11 தோல்வி படம்... இருந்தாலும் கெத்து

0 6108

கல்லூரி விழா ஒன்றில் பேசிய நயன்தாரா, தனது வெற்றிக்கு பின்னால் கணவர் விக்னேஷ் சிவன் இருப்பதாக 11 படங்கள் தோல்விக்கு பின்னரும் தன்னம்பிக்கையுடன் கூறினார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள விவேகானந்தா கலைக் கல்லூரியில் நயன் தாராவுக்கு சொந்தமான பெமி 9 என்ற பெண்களுக்கான அழகு கலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கணவர் விக்னேஷ் சிவனுடன் உற்சாகமாக கலந்து கொண்ட நயன் தாரா, தமிழில் மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு இன்னும் போதிய அளவு இல்லை என்றும், நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த விழிப்புணர்வு போய் சேர வேண்டும் என்பதுதான் தங்களது நோக்கம் என்றும் கூறிய நயன்தாரா, இந்த பொது நலத்தில் தங்கள் சுய நலமும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தால் அந்தக் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் நயன்தாரா கூறினார்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் பெண் இருப்பாள் என்று கூறுவார்கள், ஆனால் தனது வெற்றிக்கு பின்னால் தனது கணவர் விக்னேஷ்சிவன் இருப்பதாக தெரிவித்த நயன்தாரா, அவர் ஒருபோதும் தன்னிடம், ஏன் இப்படி செய்யவில்லை என்றோ, ஏன் இதை செய்யக்கூடாது என்றோ கேட்டதில்லை என்றார். தனது வெற்றி எல்லாவற்றிற்கும் காரணமான கணவருக்கு நன்றி என்று சூர்யவம்சம் படத்தின் சின்ராசு கேரக்டர் போல மேடையில் உணர்ச்சிகரமாக பேசினார் நயன்தாரா.

விக்னேஷ் சிவனும் தன் பங்குக்கு நயன்தராவை மேடையில் புகழ்ந்து தள்ள, அவர் உற்சாகத்தில் சிரித்துக் கொண்டே இருந்தார்.

நயன்தாரா , விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த பின்னர் நயன் நடிப்பில் வெளியான 12 படங்களில் ஜவான் தவிர நெற்றிக்கண், அன்னபூரணி உள்ளிட்ட 11 படங்களும் தோல்வி படங்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments