அயோத்தி நகரின் அதிகாரபூர்வ வரைபடத்தை டூ-டி மற்றும் 3டியில் உருவாக்கிய ஜெனிசிஸ் நிறுவனம்
சர்வதேச நகரங்களில் உள்ளதைப் போலவே, அயோத்தியை எளிதில் சுற்றி வரும் வகையில் அந்நகரின் வரைபடத்தை முன்னணி வரைபடத் தயாரிப்பு நிறுவனமான ஜெனிசிஸ் உருவாக்கியுள்ளது.
அயோத்தி வளர்ச்சி ஆணையம் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ள அந்த வரைபடத்தில் ஒட்டுமொத்த நகரின் அமைப்பும் டூ-டி மற்றும் த்ரீ-டியில் உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்ற அயோத்தி நகர நிர்வாகத்தின் முடிவுக்கு ஏற்ப மின்சார வாகனங்களுக்கு என சில பிரத்யேக அம்சங்கள் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன.
யாத்ரீகர்கள், உள்ளூர் வாசிகள் மற்றும் அதிகாரிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் புதிய வரைபடம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments