திருமணமான 3-வது நாளில் காதலியை கொலை செய்துவிட்டதாக காதலன் கொடுத்த புகாரில் பெண்ணின் தாய் - தந்தையர் கைது

0 1887

பட்டுக்கோட்டை அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த மகளை கொலை செய்து எரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தாய்-தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பூவலூரை சேர்ந்த நவீனும் ஐஸ்வர்யாவும் பள்ளியில் படிக்கும் போதில் இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பனியன் கம்பெனிகளில் வேலை கிடைத்ததன் பேரில் திருப்பூர் சென்ற அவ்விருவரும் கடந்த 31-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இது பற்றி தெரியவந்ததை அடுத்து திருமணமான 3 நாட்களில், ஐஸ்வர்யாவின் பெற்றோர் உறவினர்களுடன் திருப்பூர் சென்று தங்கள் மகளை பூவலூருக்கு அழைத்து வந்துனர். இதன் பின் ஐஸ்வர்யாவை செல்ஃபோன் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது முடியாததால் நவீன் போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசார் விசாரித்த போது, வீட்டுக்கு வந்த ஐஸ்வர்யா தூக்கிட்டு இறந்து விட்டதாகவும், அவரது உடலை எரித்து விட்டதாகவும் ஐஸ்வர்யாவின் பெற்றோர் கூறினர்.

அவர்களின் உறவினர்கள் 11 பேரிடம் விசாரணை நடத்திய போது, ஐஸ்வர்யா கொல்லப்பட்டதாக தெரியவந்ததன் பேரில் அவரது தந்தை பெருமாள் மற்றும் தாய் ரோஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments