போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் மாயமானதையொட்டி கலவர பூமியாக மாறியுள்ள ஈக்வடார் - அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் காணாமல் போனதால், இறந்துவிட்டதாக கருதி அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அந்நாட்டு அதிபர் டேனியல் நோபோவா, இரண்டு மாதங்களுக்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
குவாயாகில் சிறையில் அடைக்கப்ட்டிருந்த நிழல் உலக தாதா அடோல்போ மசியாஸ் காணாமல் போனாரா அல்லது தப்பிச் சென்றாரா என்ற விவரம் தெரியாத நிலையில், சிறைச்சாலைகளில் கலவரம் வெடித்தது.
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் நேரலை செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்த அரங்குக்குள் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல், ஊழியர்களை துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாகப் பிடித்தது. அப்போது ஊழியர்கள் சுடாதீர்கள் என்று கெஞ்சும் வீடியோ வெளியாகி உள்ளது.
இதனிடையே, நிலைமை கட்டுக்கொண்டுவரப்பட்டதாக ஈக்வடார் அரசு கூறியுள்ளது. தொலைகாட்சியில் நுழைந்த கும்பலை கைது செய்ததாகவும் வீடியோ வெளியிட்டுள்ளது.
Comments