மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர்

0 1267

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தரங்கம்பாடியில் அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்த சம்பா சாகுபடியை அமைச்சர் மெய்ய நாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கதிராமங்கலம் கிராமத்தில் 4 நாட்களாக தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கியுள்ள நெற்பயிர்களை விவசாயிகள் அமைச்சரிடம் காட்டினர். இதையடுத்து பேசிய அமைச்சர், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments