தி.மு.க எம்.எல்.ஏ சண்முகையாவை முற்றுகையிட்ட கிராம மக்கள் தங்களுக்கும் நிவாரணத்தொகையாக ரூ.6,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தல்

0 1879

மழை வெள்ளப்பாதிப்பின் போது உரிய வகையில் நிவாரணம் வழங்கவில்லை என ஒட்டப்பிடாரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவை துப்பாஸ்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்ய வந்த எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட அப்பகுதியினர், தங்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அப்பகுதியின் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த சங்கரன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து 3 மணி நேரத்திற்கு பின்னர் எம்.எல்.ஏ சண்முகையாவை முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், தங்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என வைக்கப்பட்டிருந்த பதாதைகளை போலீசாரின் உத்தரவை அடுத்து அப்பகுதியினர் அகற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments