கலவர பூமியாக மாறியுள்ள ஈக்வடார்.. போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் மாயமானதையொட்டி கலவரம்...

0 1077

ஈக்வடார் நாட்டில் போதைப் பொருள் மாஃபியா கும்பல் கலவரங்களை அரங்கேற்றி வரும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிறையில் அடைக்கப்பட்ட அடோல்போ மசியாஸ் என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் திடீரென மாயமானதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் கொன்றுவிட்டதாககக் கூறி அவனது ஆதரவாளர்கள் நாடு முழுவதுமுள்ள சிறைகளில் கலவரத்தில் இறங்கினர்.

கத்தி முனையில் போலீசாரை சிறைபிடித்த அவர்கள், சிலரை தூக்கிலேற்றி கொலை செய்துள்ளனர்.

சிறைக்கு வெளியே அடோல்போவின் ஆதரவாளர்கள், கண்ணில் படும் மக்களை எல்லாம் துப்பாக்கியால் சுடுவது, கத்தியால் தாக்குவது, தீ வைத்துக் கொளுத்துவது, சாலையோர கார்களுக்குத் தீவைப்பது என கலவரத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

நேரலை செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்த தொலைக்காட்சி ஒன்றின் அரங்குக்குள் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல், ஊழியர்களை துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.

மற்றொரு பகுதியில் பள்ளி ஒன்றுக்குள் நுழைந்த கும்பல், ஆசிரியர்களையும் மாணவர்களையும் துப்பாக்கி முனையில் சிறைபிடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments