திரிணாமூல் காங். நிர்வாகி வீட்டில் சோதனையிட சென்றபோது தாக்குதல். அதிகாரிகள் சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.
மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு மம்தா பானர்ஜி அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் பொருள் விநியோக முறைகேடு தொடர்பான புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் கடந்த 5ம் தேதி மாநிலத்தின் 15 இடங்களில் சோதனைகள் நடத்தினர்.
திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஷாஜகான் வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட சென்ற போது சுமார் 200 பேர் கொண்ட கும்பல் அதிகாரிகளையும் பாதுகாப்புக்குச் சென்ற துணை ராணுவத்தினரையும் சுற்றிவளைத்தது.
அப்போது, அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அதிகாரிகள் சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Comments