பிரதமர் மோடி- யுஏஇ அதிபர் முகமது பின் ஜாவேத் முன்னிலையில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

0 1575

பிரதமர் மோடி, யுஏஇ அதிபர் முகமது பின் ஜாயேத் ஆகியோர் முன்னிலையில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி துறை மற்றும் சுகாதாரத்துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்காக இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

உணவுப்பதப்படுத்துதல் துறை சார்பில் மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. பசுமைக்கு பாதகம் ஏற்படுத்தாத நவீன தொழில்நுட்பத் துறைமுகங்கள் அமைப்பதற்கு குஜராத் அரசுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

முன்னதாக குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபரை பிரதமர் மோடி விமானநிலையத்திற்குச் சென்று வரவேற்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments