ஆட்சேபகரமாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சஸ்பெண்ட். மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய சிலர் கட்சிகள் போர்க்கொடி
இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மாலத்தீவு அதிபர் முய்ஸு சீனாவுக்கு சென்று அந்நாட்டை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
பிரதமர் மோடி லட்சத்தீவுகளுக்கு சென்று திரும்பியதில் இருந்து இயற்கை அழகு மிக்க அப்பகுதி அடுத்த மாலத் தீவுகளாக மாறுமா என்ற விவாதம் இணையத்தில் நடைபெற்று வருகிறது.
உடனே மாலத்தீவு அரசு அதிகாரிகள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிராக ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை கூறினர்.
இது பற்றி மாலத்தீவு அரசின் கவனத்துக்கு இந்திய அரசு கொண்டு சென்றதை அடுத்து 2 பெண் அமைச்சர்கள் உட்பட 3 அமைச்சர்களை அந்நாட்டு அரசு சஸ்பெண்ட் செய்தது.
அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாலத்தீவில் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்நிலையில் சீனா சென்றுள்ள முய்ஸு, அந்நாட்டை தங்கள் மதிப்புமிக்க மற்றும் தவிர்க்க இயலாத கூட்டாளி என்று கூறினார்.
இந்தியா - மாலத்தீவு இடையிலான பிரச்சினையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சீனா விளக்கமளித்தது.
Comments