ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரில் 2.40 லட்சம் நானோ பிளாஸ்டிக் துகள்கள்... அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்
பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரில், 2 லட்சத்து 40 ஆயிரம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தலை முடியின் அகலத்தில் வெறும் ஒன்றரை சதவீதமே இருக்கும் நானோ பிளாஸ்டிக் துகள், மனித செல்கள் வழியாக ரத்தத்தில் எளிதில் கலந்து, உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தொப்புள் கொடி வழியாக தாயின் கர்ப்பப்பையில் உள்ள சிசுவின் உடலுக்குள்ளும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் புகுந்துவிடும் என தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், குழாய் தண்ணீரை விட பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள் அதிகம் இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
Comments