விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு அர்ஜுனா விருதை வழங்கி கவுரவித்தார்...
விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டரும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அர்ஜுனா விருதை வழங்கி கவுரவித்தார்.
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார். இந்த ஆண்டு அர்ஜுனா விருது பெறும் 26 விளையாட்டு வீரர்களில் ஒரே கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவார்.
பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள், பாரா வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அம்பு எய்தல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளியான ஷீத்தல் தேவிக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பாட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு விளையாட்டுத்துறையின் உயரிய கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் தமிழகத்திற்கு பெருமை தேடிக்கொடுத்துள்ள செஸ் வீரரான பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆ.பி.ரமேஷ் உள்ளிட்ட 5 பேருக்கு துரோணாச்சாரியார் விருதும் வழங்கப்பட்டது
Comments