3 நாள் வர்த்தக உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்... தொழில் வர்த்தகம் மற்றும் முதலீடுகள்-எதிர்கால வளர்ச்சி பற்றி ஆலோசனை

0 653

எதிர்கால நலன்களுக்கான உச்சி மாநாட்டை குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

மூன்றுநாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமருக்கு விமான நிலையத்தில் முதலமைச்சர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று காந்திநகரில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் நிர்வாகிகளுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிற்பகலில் விபரந்த் குஜராத் பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

12ம் தேதி வரை நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் எதிர்கால தொழில் வர்த்தக முதலீடு உள்ளிட்டவைகளின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் நடைபெற உள்ளன.

பல்வேறு நிறுவனங்களின் புதிய பொருட்களும் நவீனத் தொழில்நுட்பமும் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments