இந்து மதத்தின் புனிதத்தையும், நம்பிக்கையும் அவமதிக்கும் விதமாக அன்னபூரணி படத்தில் காட்சிகள் உள்ளது என புகார்.

0 1552

மத உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் உள்ளிட்ட அன்னபூரணி படக்குழுவினர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்து மதத்தின் புனிதத்தையும், நம்பிக்கையும் அவமதிக்கும் விதமாக அன்னபூரணி படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் மீது மும்பை மார்க் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டிசம்பர் 2023-இல் வெளியான இப்படத்தின் படத்தயாரிப்பாளர், நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னரபூரணி திரைப்படத்தில் ராமாயணம் மற்றும் கடவுள் ராமர் குறித்தும் அவதூறு பரப்புவதாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments