காதை துண்டாக வெட்டிய.. கறிக்கடை லவ்வர்..! காதல் கசந்ததால் மனைவி திரிஷா மீது தாக்குதல்

0 1270

காதலித்து திருமணம் செய்த மனைவி பிரிந்து வாழும் நிலையில், வேறு ஒரு இளைஞருடன் பைக்கில் சுற்றுவதை கண்டு ஆத்திரமடைந்த கணவர், பட்டபகலில் கறி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிய சம்பவம் சென்னை வண்ணாரப்பேட்டையில் அரங்கேறி உள்ளது

காதல் கணவனால் வெட்டப்பட்டு ரத்தம் சொட்ட வீதியில் தவித்த பெண்ணை போலீசார் மீட்ட காட்சிகள் தான் இவை..!

சென்னை திருவெற்றியூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஜெயினப் என்கிற திரிஷா .

24 வயதான இவர் கடந்த மூன்று ஆண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டையை சேர்ந்த கறிக்கடை ஊழியர் ரஹ்மத்துல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணத்துக்கு பின் காதல் கணவர் மதுவுக்கு அடிமையான நிலையில் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற திரிஷா குழந்தை பெற்ற பின்னரும் அங்கேயே வசிக்க தொடங்கினார்.

கணவனை சந்திப்பதை தவிர்த்த திரிஷா, கடந்த எட்டு மாதங்களாக புதுவண்ணார பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள இரும்பு குடோனில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் திங்கட்கிழமை காலை 11:45 மணி அளவில் தனது மனைவி வேலை செய்யும் இரும்பு குடோனுக்கு சென்ற ரஹ்மத்துல்லாஹ் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மனைவி திரிஷாவை வெளியே அழைத்து வந்து, மறைத்து வைத்து எடுத்துச்சென்ற கறி வெட்டும் கத்தியால் சராமாரியாக வெட்டியுள்ளார்.

தலை மற்றும் தோள்பட்டை கழுத்து , கைகளில் பலத்த காயமடைந்த திரிஷா ரத்தம் சொட்ட சொட்ட வீதியில் விழுந்து தவித்தார். அவரது காது துண்டாக வெட்டப்பட்ட நிலையில் , தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் போதையில் இருந்த கணவன் ரஹ்மத்துல்லாவை மடக்கிப்பிடித்தனர்.

பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய திரிஷாவை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இரும்பு குடோனில் வேலை செய்யும் போது திரிஷாவுக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவருடன் ஒன்றாக பைக்கில் சுற்றி வந்ததாக கூறப்படுகின்றது.

இதனை பார்த்த கணவர் ரஹ்மத்துல்லா, அவனுடன் சுற்றாதே என்று கூறி கண்டித்துள்ளார், ஆனால் திரிஷா அதனை கேட்க வில்லை என்றும் இதன் எதிரொலியாக இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments