கணித அறிவின் மூலம் லாட்டரியில் கோடி கோடியாக பரிசை அள்ளும் அமெரிக்கத் தம்பதி

0 1238

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதிகளான ஜெர்ரி, மார்ஜ் செல்பீ இருவரும் தங்களது கணித அறிவின் மூலம் லாட்டரியில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் பரிசு வென்றுள்ளனர்.

2003-ஆம் ஆண்டு முதல் லாட்டரியில் தங்களது கவனத்தைச் செலுத்தி வரும் அவர்கள், லாட்டரியில் பரிசு விழுந்த எண்களை ஆய்வு செய்து, அவற்றுக்கு இடையே இருந்த ஒற்றுமையைக் கண்டறிந்து தங்களது கணித அறிவுடன் லாட்டரி சீட்டுகளை அவர்கள் வாங்கி வருகின்றனர்.

அதன்மூலம் அவர்களுக்கு ஏராளமான பணம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து பரிசுகளை அவர்கள் வென்றதால் அதுகுறித்து போலீஸ் விசாரிக்க, தம்பதிகள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடாமல் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவது தெரியவந்தது.

லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு வென்ற இத் தம்பதியின் வாழ்க்கை வரலாறு ஹாலிவுட்டில் ஜெர்ரி அண்டு மார்ஜ் கோ லார்ஜ் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments