ரம்மியை நம்பி ரூ 1 கோடி கடன் தெருக்கோடிக்கு வந்த விரக்தி மகனை கொன்ற சூதாடி தந்தை..! மொத்த சொத்த வித்தும் கடன் தீரல..

0 2460

கடந்த 5 ஆண்டுகளாக ஆன் லைன் ரம்மி விளையாடி 1 கோடி ரூபாய் கடனாளியனதால் சொந்த ஊரில் உள்ள மொத்த சொத்தையும் விற்று சூதாடி தோற்ற தந்தை ஒருவர், தனது 8 வயது மகனை கொலை செய்து விட்டு மெரீனா கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்

ஆன்லைன் ரம்மியால் மகனை கொலை செய்து விட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற தந்தை இவர் தான்..!

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் பெண்டியாலா கிருஷ்ண சைதன்யா. 33 வயதான இவருக்கு வைதேகி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருந்தனர்.குடும்பத்துடன் தாம்பரம் அடுத்து மாடம்பாக்கம், பார்வதி நகர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள தாம்பரம்விமானப் படை பயிற்சி மையத்தில் சமையல்காரராக வேலை செய்து வந்தார். இவருக்கு மாதம் 47000 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தனது மூத்த மகன் பத்திரியை வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த, சைதன்யா, அங்கிருந்து மெரினா பீச்சுக்கு சென்று கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்துடன் சுற்றிய போது போலீசார் மடக்கிப்பிடித்து சேலையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் ரம்மியில் சூதாடும் பழக்கம் இருந்ததாகவும் அதன் காரணமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் ஏற்பட்ட நிலையில், கடன் கொடுத்தவர்கள் கடன் தொகையை கேட்டு வந்த நிலையில் , சென்னையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று தனது மனைவி மற்றும் தனது சொத்துக்களை இலட்சக்கணக்கில் விற்பனை செய்து ஒரு பெரும் தொகையை திருப்பி கொடுத்துள்ளார். அவற்றை கொடுத்தும் கடனை அடைக்க இயலவில்லை என்றும் இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணியினை தொடர்வதற்காக சேலையூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறிய நிலையில்
மீதமுள்ள கடன் தொகையை கடன் கொடுத்தவர்கள் கேட்டு வந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகின்றது

மூத்த மகனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவனை இந்த உலகத்தில் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல் , வீட்டில் மனைவியும் இளைய மகனும் இல்லாத நேரத்தில் , முதலில் அவனை கொன்று படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்க விட்டதாக தெரிவித்த சைதன்யா , மெரீனா சென்று தானும் உயிரை மாய்த்துக் கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு கடற்கரைக்கு செல்லும் பொழுது காவலர்களிடம் சிக்கிக் கொண்டதாக விசாரணையில் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மகனை கொலை செய்த சைதன்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில் தன் மகனை படுக்கை அறையில் தூக்கி தொங்க விட்டவர், ஏன் மெரினா பீச் வரைக்கும் நடந்து சென்றார் ? வீட்டிலேயே தற்கொலை செய்யவில்லை என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY