பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை ரத்து... 2 வாரங்களுக்குள் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு
குஜராத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
2002-ஆம் ஆண்டு கலவரத்தின் போது பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் 14 பேரும் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை கருணை அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி குஜராத் அரசு விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
குற்றவாளிகளின் தண்டனை குறித்து முடிவு எடுக்க குஜராத் அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான், இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால் அம்மாநில அரசு தான் தண்டனை குறித்து முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.
குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் கோத்ரா சிறை நிர்வாகத்தின் முன் ஆஜராகவும் உத்தரவிட்டனர்.
Comments