தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சரியாக செயல்படுத்தப்படவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

0 621


தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சரியாக செயல்படுத்தாததால் ஒரு நபருக்கு சராசரியாக 40 லிட்டர் குடிநீர் கிடைக்கவேண்டிய இடத்தில் 26 லிட்டர் மட்டுமே கிடைப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது பேசிய அண்ணாமலை, சாதி அரசியலால் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தருமபுரியில் உள்ள மலை கிராமங்களுக்கு சாலை அமைக்க மத்திய அரசு தயாராக இருந்தும் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என குற்றம்சாட்டிய அண்ணாமலை, தருமபுரி-மொரப்பூர் ரெயில்  பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சித்துவருவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments