பிரதமர் மோடியை விமர்சனம் செய்த 3 அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம்

0 1084

பிரதமர் மோடியை அவதூறாக விமர்சனம் செய்த 3 அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. அண்மையில் பிரதமர் மோடி லட்சத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

இது தொடர்பான பிரதமரின் எக்ஸ் பதிவுகளை கேலி செய்யும் விதமாக மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் பதிவுகள் போட்டனர் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

நடிகர்கள் சல்மான் கான், அக்சய் குமார்  கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் இந்தியர்கள் மாலத்தீவு சுற்றுலாவை ரத்து செய்து லட்சத்தீவுகளுக்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து மாலத்தீவுக்கான ஏராளமான விமான டிக்கட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே அமைச்சர்கள் கூறியவை அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ள மாலத்தீவு அரசு பிரதமர் மோடியை விமர்சித்த மரியம் ஷுயினா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 அமைச்சர்களை இடைநீக்கம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments