மீஞ்சூரில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை மீது வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் புகார்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் தடுமாறி விழும் நிலை ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
மீஞ்சூரில் இருந்து வல்லூர் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பல ஆண்டுகளாக சேதம் அடைத்துள்ளது. இதுதொடர்பாக, செய்தி சேகரித்து கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த தம்பதியர், பள்ளத்தில் விழுந்து எழுந்து சென்றனர்.
இதுகுறித்து, மீஞ்சூர் பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் பலமுறை புகார் அளித்தும் அவ்வப்போது நெடுஞ்சாலை துறை பேட்ச் ஒர்க் மட்டுமே செய்துவிட்டு போவதாக கூறுகின்றனர்.
இவ்வாறான தற்காலிகமாக சீரமைக்கப்படும் சாலையும், அடுத்த சில நாட்களில், கனரக வாகன போக்குவரத்தால், மீண்டும் சேதம் அடைந்து விடுவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Comments