ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கு இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை.. தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகள்..
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் ரஷ்யா, உக்ரைன், செர்பியா உட்பட 16 நாடுகளில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ரஷ்யா போர் தொடுத்ததால், இனி மேற்கத்திய நாடுகளை போல் டிசம்பர் 25-ஆம் தேதி தான் உக்ரைனிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் என அந்நாட்டு ஆர்த்தடாகஸ் திருச்சபை அறிவித்தபோதும், அங்குள்ள தேவாலயங்களில் வழக்கம்போல் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
செர்பியா தலைநகர் பெல்கிரேட்டில், கருவாலி மரக்கிளைகளை எரித்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கும் சடங்கு அனுசரிக்கப்பட்டது.
Comments