கலைஞர் 100 நிகழ்ச்சியை நடத்திய திரையுலகினருக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

0 1233

நடிகர் கமலஹாசனின் கோரிக்கையை ஏற்று, பூந்தமல்லி பகுதியில் 140 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்ற கலைஞர் 100 நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிய திரைப்பட நகரில் எல்இடி வால், அனிமேஷன், புரொடக்ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள், 5 நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார்.

எம்.ஜிஆர் பிலிம் சிட்டி 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு படப்பிடிப்பு தளங்களாக விரைவில் அமைக்கப்பட இருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments