வங்கதேசத்தில் இன்று நடைபெறுகிறது நாடாளுமன்றத் தேர்தல்..!
வங்கதேசத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 12 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். நேரடியாக நிரப்பப்பட உள்ள 300 இடங்களுக்கு 2 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளதால், நாளை காலை முதல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் ஷேக் ஹசீனா 5வது முறையாக ஆட்சியைத் தக்க வைப்பாரா என்பது இந்தத் தேர்தல் முடிவுகளில் தெரிய வரும். தேர்தலுக்கு முன்பு வன்முறைகள் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டன. ரயிலுக்குத் தீவைப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துவிட்டனர். சுமார் 8 லட்சம் போலீசாரும் துணை ராணுவப்படையினரும் தேர்தல் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்
Comments