கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய சூழல் நடுவே குஜராத் செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்...?

0 815

அமலாக்கத் துறை கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய சூழலில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிறன்று குஜராத் செல்கிறார்.

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதனால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று அவரது கட்சிப் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு குஜராத் செல்லும் கெஜ்ரிவால், அங்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த பயணத்தின் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சைத்ரா பசவானையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments