அயோத்தியில் ராமர் சிலையை நிறுவுவதற்கு 22-ஆம் தேதியை தேர்வு செய்தது ஏன்?... வெளியான வியப்பூட்டும் காரணம் !
அயோத்தி கோயிலில் ராமர் சிலையை நிறுவுவதற்கு வேத நிபுணர்கள் 22-ஆம் தேதி தேர்வு செய்தது ஏன் என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது.
ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்வதற்கு காலை 11 மணி 53 நிமிடம் முதல் 12 மணி 33 நிமிடம் வரையிலான நேரமும் குறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
22-ஆம் தேதி அதிகாலை 3 மணி 52 நிமிடத்துக்கு தொடங்கும் சக்தி வாய்ந்த மிருகசீரிஷம் நட்சத்திரம் மறுநாள் 23-ஆம் தேதி அதிகாலை 4 மணி 58 நிமிடம் வரை நீடிப்பதாகவும்,..
சோமா என்ற கடவுளுடன் தொடர்புடைய மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் போது செய்யப்படும் காரியத்துக்கு அழிவே இருக்காது என்றும் வேத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர, அமிர்த சித்தி யோகம், சர்வார்த்த சித்தி யோகமும் ஒத்துப்போவதால் தான் 22-ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Comments