பெற்றோருக்கு தெரியாமல் சென்னையை சுற்றிப் பார்க்க வந்த மாணவிகள்... அறிவுரை கூறி ஊருக்கு அனுப்பி வைத்த போலீசார்

0 2240

வீட்டில் பணம் திருடிக் கொண்டு, பெற்றோருக்கு தெரியாமல் சென்னை வந்து சுற்றிப் பார்த்து விட்டு சொந்த ஊர் திரும்பிய போது தவறுதலாக காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி செய்வதறியாது விழித்துக் கொண்டு நின்ற 14 வயது பள்ளி மாணவிகள் 3 பேரை போலீசார் மீட்டனர்.

அந்த மாணவிகள் 3 பேரும் கரூர் தாந்தோன்றிமலையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த 4-ஆம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்ட அவர்கள், வகுப்புக்கு செல்லாமல், கோயில் ஒன்றுக்குச் சென்று சீருடையை மாற்றி வேறு உடைகளை மாட்டிக் கொண்டு ரயில் மூலம் சென்னை கிளம்பியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

2 நாட்கள் சென்னையை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ரயில் மூலம் கரூருக்கு புறப்பட்ட போது நள்ளிரவு 3 மணி வாக்கில் கரூர் என நினைத்து தவறுதலாக காட்பாடியில் இறங்கி விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

மாணவிகள் மீட்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் அவர்களை 2 நாட்களாக தேடி வந்த தாந்தோன்றிமலை போலீசார் காட்பாடிக்கு வந்து மாணவிகளை அழைத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments